தபால்துறை தேர்வு: தமிழ்ப் பாடத்தில் ஹரியானா மாணவர்கள் முதலிடம்; பிகார் பாணியா?

பிகாரில் பிளஸ் 2 தேர்வில் நடந்த முறைகேடு பலருக்கும் நினைவிருக்கும். அதுபோன்றதொரு முறைகேடு இந்திய தபால் துறை நடத்திய பணியாளர் தேர்வில் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியுள்ளது.
தபால்துறை தேர்வு: தமிழ்ப் பாடத்தில் ஹரியானா மாணவர்கள் முதலிடம்; பிகார் பாணியா?


மதுரை: பிகாரில் பிளஸ் 2 தேர்வில் நடந்த முறைகேடு பலருக்கும் நினைவிருக்கும். அதுபோன்றதொரு முறைகேடு இந்திய தபால் துறை நடத்திய பணியாளர் தேர்வில் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியுள்ளது.

தபால் துறைக்கு நடந்த தேர்வில், ஹரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதை, தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த ஹரியானா மாணவர்கள் தினேஷ் மற்றும் ராகுலை (25 மதிப்பெண்ணுக்கு முறையே 24 மற்றும் 22 மதிப்பெண் எடுத்தவர்கள்) அவர்களது செல்பேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்ற போது அவர்களது செல்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

முறைகேடு நடந்திருக்கும் என்ற ஊகம் ஊர்ஜிதமானதால், மதுரையில் இருந்து தேர்வெழுதிய 40 மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தபால் துறையில் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்ட் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாயன்று வெளியானது. அதில் எனது மதிப்பெண்ணை பார்த்த பிறகு, எனது தேர்வெண்ணுக்கு அடுத்திருந்த மாணவரின் மதிப்பெண்ணை பார்த்து அதிர்ந்து போனேன். அதே போல அடுத்தடுத்த மாணவர்களின் மதிப்பெண்ணை பார்த்த போது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் 20க்கும் மேல் மதிப்பெண் எடுத்திருந்தனர். இது குறித்து எனது நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லி எச்சரித்தேன் என்கிறார் ஒரு இளைஞர்.

மற்றொருவர் இது பற்றி கூறுகையில், தமிழ் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது, தமிழ் நன்கு தெரிந்த, பள்ளியில் தமிழ்ப் பாடம் பயின்ற எங்களுக்கே சற்று கடினமாக இருந்தது. அப்படி இருக்கும் போது ஹரியானா மாணவர்கள் எப்படி அதிக மதிப்பெண் பெற்றிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ஒருபடி மேலே போய், மதிப்பெண் சான்றிதழில் கொடுக்கப்பட்டிருக்கும் ஹரியானா மாணவரின் செல்போன் எண்ணை எடுத்து தொடர்பு கொண்டுள்ளார். இவர் ஆங்கிலத்தில் பேச, அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. பிறகு தமிழில், உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்க,  அதற்கு அந்த மாணவர் ஹிந்தியில், "எனக்கு தமிழ் தெரியும் (முஜ்ஸே தமிழ் மாலும் ஹை)" என்று கூறியுள்ளார்.

இது பற்றி எந்த தகவலும் எங்களுக்குத் தெரியாது என்று தபால் துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com