ஓபிஎஸ் தலைமைக்கு ஆதரவு: 6,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

அதிமுகவில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் நீக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமைக்கு ஆதரவாக சுமார் 43 லட்சம் பேரின் கையொப்பம் அடங்கிய 6,000 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
ஓபிஎஸ் தலைமைக்கு ஆதரவு: 6,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

அதிமுகவில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் நீக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமைக்கு ஆதரவாக சுமார் 43 லட்சம் பேரின் கையொப்பம் அடங்கிய 6,000 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலைக்கு அதிமுகவைச் சேர்ந்த சசிகலா தலைமையிலான அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் உரிமை கொண்டாடி வருகின்றன. எதிர்வரும் சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் "இரட்டை இலை' சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என்று இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் நேரில் வலியுறுத்தினர்.
இதையடுத்து, இரு தரப்பும் திங்கள்கிழமை (மார்ச் 20) மாலை 4 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சசிகலாவுக்கும், அவரது தலைமைக்கு எதிராக புகார் தெரிவித்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயனுக்கும் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இருப்பினும், இந்தக் கடிதத்துக்கு பதில் அளிக்க இரு தரப்பிலும் ஒரு நாள் கூடுதலாக அவகாசம் கோரப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்பதாகக் கூறி அதிமுகவைச் சேர்ந்த சுமார் 43 லட்சம் பேர் கையொப்பமிட்ட 6,000 பிரமாண பத்திரங்கள், தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் மூலம் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினரில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்கும் தொண்டர்கள், கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோரின் கையொப்பம் மாவட்ட அளவில் சேகரிக்கப்பட்டு, இந்தப் பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், மாநிலம் தழுவிய அளவில் சுமார் 60 லட்சம் தொண்டர்கள் எழுத்துப்பூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமைக்கு ஆதரவாகக் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவை தொகுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அடுத்து வரும் நாள்களில் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஓபிஎஸ், சசிகலா தரப்பு செவ்வாய்க்கிழமை பதில் அளித்த பிறகு, அதிமுக தேர்தல் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக இரு தரப்பையும் புதன்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நேரில் அழைத்து விசாரணை நடத்துவார் என்றும் அதன் முடிவில் சின்னம் ஒதுக்கீடு குறித்து ஆணையம் முடிவு செய்யும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com