கேள்வி நேரத்தின்போது அமைச்சர்கள் பங்கேற்காதது குறித்து அன்சாரி வேதனை

மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, மத்திய அமைச்சர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்காதது குறித்து அவைத் தலைவர் ஹமீது அன்சாரி வேதனை தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின்போது அமைச்சர்கள் பங்கேற்காதது குறித்து அன்சாரி வேதனை

மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, மத்திய அமைச்சர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்காதது குறித்து அவைத் தலைவர் ஹமீது அன்சாரி வேதனை தெரிவித்தார்.
மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, கப்பல் போக்குவரத்துத் துறை தொடர்பான கேள்வியொன்று அவையின் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, கேள்வியை எழுப்பிய உறுப்பினர் மட்டுமல்லாது, பதிலளிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் அவையில் காணப்படவில்லை.
அப்போது ஹமீது அன்சாரி, "இது மிகவும் அசாதாரணமான சூழ்நிலை' என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்பான கேள்வியை அவைத் தலைவர் அனுமதித்தார். எனினும், அந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் அவையில் இல்லை.
அப்போது, காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் எழுந்து "கேபினட் அமைச்சர்களில் ஒருவர் கூட அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை; இணை அமைச்சர்கள் மட்டுமே அவையில் உள்ளனர்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, மின் துறை தொடர்பான கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும், அதற்கு பதிலளிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் அவையில் காணப்படவில்லை.
இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்காதது குறித்து ஹமீது அன்சாரி வேதனை தெரிவித்தார். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, "இதுதான் அதிகபட்ச அமைச்சர்கள், குறைந்தபட்ச ஆட்சி நிர்வாகத்துக்கான அடையாளம்' என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com