போராட்டத்தைக் கைவிட விவசாயிகளிடம் தமிழக எம்.பி.க்கள் நேரில் வேண்டுகோள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் கடந்த ஏழு நாள்களாக நடத்தி வரும் போராட்டத்தைக் கைவிடுமாறு தமிழக விவசாயிகளிடம் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் திங்கள்கிழமை நேரில் வேண்டுகோள் விடுத்தனர்.
தேசிய நதிகளை இணைக்கக் கோரியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை திங்கள்கிழமை சந்தித்த மக்களவை
தேசிய நதிகளை இணைக்கக் கோரியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை திங்கள்கிழமை சந்தித்த மக்களவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் கடந்த ஏழு நாள்களாக நடத்தி வரும் போராட்டத்தைக் கைவிடுமாறு தமிழக விவசாயிகளிடம் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் திங்கள்கிழமை நேரில் வேண்டுகோள் விடுத்தனர்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க வேண்டும்; விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ஆம் தேதி தேசிய - தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர்.
பொதுமக்களையும் ஈர்க்கும் விதமாக அரை நிர்வாணக் கோலத்திலும் இலை, தழைகளை கட்டிக் கொண்டும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் இருவர் மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். பல விவசாயிகள் மொட்டை அடித்துக் கொண்டனர்.
இந்நிலையில், ஏழாம் நாளான திங்கள்கிழமை விவசாயிகள், தங்கள் கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் டாக்டர் வேணுகோபால், நவநீதகிருஷ்ணன், வைத்திலிங்கம் ஆகியோர் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் சந்தித்து பேசினர். அப்போது "சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் கோரிக்கைகளை முன்வைக்க உதவுகிறோம்' என்று எம்.பி.க்கள் கூறினர்.
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் அய்யாக்கண்ணு குழுவினரை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் உறுதியுடன் இருப்போம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

23-இல் உயர்நிலைக் கூட்டம்

தில்லியில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகள் மீது முடிவெடுக்க வரும் 23-ஆம் தேதி மத்திய அரசின் உயர்நிலைக் குழு கூடவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் திங்கள்கிழமை கடிதம் எழுதினார். அதில், "விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க விரைவில் உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாயக் கடன்களைத் திரும்பப் பெற வங்கிகள் கையாளும் நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறு மத்திய நிதிச் சேவை, பாரத ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்' என்று ராதா மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வரும் 23-ஆம் தேதி தில்லியில் உயர்நிலைக் குழுவைக் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


தில்லியிலேயே தங்குவோம்: அய்யாக்கண்ணு திட்டவட்டம்

"எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை தில்லியிலேயே தங்கியிருப்போம்' என்று போராட்டக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இது குறித்து திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க உதவுவதாக தமிழக எம்.பி.க்கள் கூறினர்.
ஆனால், மத்திய அரசிடம் இருந்து எவ்வித உத்தரவாதமும் வரவில்லை. எனவே, தீர்வு கிடைக்கும் வரை தில்லியில்தான் இருப்போம். சாகும் வரை ஜந்தர் மந்தரில்தான் இருப்போம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com