ரயில்வே நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களும், அத்துறை சார்ந்த துணை மானியக் கோரிக்கைகளும் மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின.

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களும், அத்துறை சார்ந்த துணை மானியக் கோரிக்கைகளும் மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின.
நடப்பு நிதியாண்டுக்கான (2017-18) பொது பட்ஜெட்டுடன் இணைந்து ரயில்வே பட்ஜெட்டையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த மாதம் 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ரயில்வே துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.1,78,350 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும்.
இந்நிலையில், ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின. மேலும், 2016-17 மற்றும், 2013-14-ஆம் நிதியாண்டுகளுக்கான துணை மானியக் கோரிக்கைகளும் அவையில் நிறைவேறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com