ராமர் பாலம் இயற்கையானதுதானா? இதோ நடக்கப் போகுது ஒரு புது ஆராய்ச்சி!

ராமேஸ்வரத்துக்கும் மன்னார் வளைகுடாவுக்குமிடையில் அமைந்துள்ள ராமசேது பாலத்தின் உருவாக்கம் குறித்தது ஆய்வு ஒன்றினை செய்ய இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் முடிவு செய்துள்ளது.
ராமர் பாலம் இயற்கையானதுதானா? இதோ நடக்கப் போகுது ஒரு புது ஆராய்ச்சி!

புதுதில்லி: ராமேஸ்வரத்துக்கும் மன்னார் வளைகுடாவுக்குமிடையில் அமைந்துள்ள ராமசேது பாலத்தின் உருவாக்கம் குறித்தது ஆய்வு ஒன்றினை செய்ய இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இந்துக்களின் நம்பிக்கைக்கு உரியதான, ராமேஸ்வரத்துக்கும் மன்னார் வளைகுடாவுக்குமிடையில் அமைந்துள்ள ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்த ஆய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வானது இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலினால் நடத்தப்பட உள்ளது.

இந்திய தொல்பொருள் துறையின் முன்னாள் இயக்குநரான அலோக் திரிபாதி தலைமையில் வரும் அக்டோபர் மாதம் இந்த ஆய்வு தொடங்க உள்ளது என்றும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com