கல்வி நிலையங்களில் பாலியல் குற்றங்கள்: புகார் செய்ய தனி இணையதளம் உருவாக்கும் மஹராஷ்டிரா  அரசு!

மஹராஷ்டிரா  மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களை புகார் செய்ய தனி இணையதளம் ...
கல்வி நிலையங்களில் பாலியல் குற்றங்கள்: புகார் செய்ய தனி இணையதளம் உருவாக்கும் மஹராஷ்டிரா  அரசு!

மும்பை: மஹராஷ்டிரா  மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களை புகார் செய்ய தனி இணையதளம் உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வினோத் தவ்டே தெரிவித்துள்ளார்.

மஹராஷ்டிரா மாநிலம் அஹமதுநகரில் உள்ள, மாவட்ட பஞ்சாயத்து பள்ளி ஒன்றில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம குறித்து, மாநில சட்டசபையின் கேள்வி நேரத்தில் இன்று விவாதம் நடந்தது. அப்பொழுது அதற்கு பதிலளித்து மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வினோத் தவ்டே தெரிவித்ததாவது:

பாலியல் குற்றங்கள் குறித்து புகார் செய்வதற்கு ஏற்கனவே 103 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்  மாநிலத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்த வசதி குறித்து தெரியவில்லை. அத்துடன் கல்வி நிலையங்களில் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பதிவு செய்ய தனி இணையதளம் உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியை பெற்றோர்கள், ஆசிரியர்களுள்ளிட்ட அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புகார்களை பதிவு செய்பவர்கள் இதன் காரணமாக தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை வரும் என்று அஞ்ச வேண்டாம். பொதுவாக ஒரு ஒரூ புகாரானது முழுமையாக விசாரிக்கப்பட்டு, உண்மைகள் நிரூபிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மற்றும் குற்றவாளியின் பெயர்கள் வெளியே அறிவிக்கப்பட மாட்டாது.   

முன்னதாக இத்தகைய சம்பவங்களை தடுக்க பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவும் விரைவில் செயல்படுத்தப்படும். ஆனால் இது மட்டுமே தீர்வு இல்லை. மாணவிகளின் நடந்து கொள்ளும் முறைகளில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் ஆசிரியர்கள் அதனை உடனே கண்காணித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தன்னுடைய பதிலில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com