வந்தே மாதரம் பாடாத இஸ்லாமிய கவுன்சிலர்கள் டிஸ்மிஸ்: மீரட் நகராட்சி அதிரடி!

மீரட் நகராட்சி கூட்டத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட பொழுது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய ஏழு இஸ்லாமிய கவுன்சிலர்களை ...
வந்தே மாதரம் பாடாத இஸ்லாமிய கவுன்சிலர்கள் டிஸ்மிஸ்: மீரட் நகராட்சி அதிரடி!

மீரட்: மீரட் நகராட்சி கூட்டத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட பொழுது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய ஏழு இஸ்லாமிய கவுன்சிலர்களை நகராட்சித் தலைவர் பதவி நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மீரட் நகராட்சி மன்றத்தின் கூட்டம் கடந்த செவ்வாய் அன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் இதர உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து 'வந்தே மாதரம்' பாடலை பாடத் துவங்கினர். உடனே அவையிலிருந்த ஏழு இஸ்லாமிய கவுன்சிலர்களும் அங்கிருந்து வெளியேறினார்கள் 

பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் அவைக்கு திரும்பிய பொழுது, அவர்களை உள்ளே அனுமதிக்க பாரதிய ஜனதாவைச் சேர்ந்த நகராட்சித் தலைவரான ஹரிஹந்த் அலுவாலியா மறுத்து விட்டார். அத்துடன் அவர்கள் ஏழு பேரையும் பதவியிலிருந்து நீக்கும் மசோதாவானது நேற்று நடைபெற்ற நகராட்சி குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்துநகராட்சி தலைவர் அலுவாலியா கூறும் பொழுது, 'மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இதனை மிக முக்கியமான விஷயமாக கருதுகின்றனர். அவர்களைத் தவிர நாங்கள் அனைவரும் 'வந்தே மாதரம்' பாடல் பாடுவதில் உறுதியாக இருந்தோம். எனவே நகராட்சி கூட்டம் மறுமுறை நடைபெறும் பொழுது வந்தே மாதரம் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாரையும் நங்கள் அனுமதிப்பதாக இல்லை.இதற்காக நாங்கள் சிறை செல்லவும் தயராக இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த இஸ்லாமிய கவுன்சிலர்களான ஷாகித் அப்பாஸி மற்றும் அஷ்ரப் ஆகியோர் , 'எங்களது மதம் வந்தே மாதரம் பாடலை அனுமதிப்பதில்லை.இந்த பிரச்சினையில் நாங்கள் பதவியை ராஜினாமா செய்யக் கூட தயாராக இருக்கிறோம். ஆனால் வந்தே மாதரம் பாடப்போவதில்லை' என்று தெரிவித்தனர். .    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com