பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் சேருவதை தெலங்கானா காவல்துறை ஊக்குவிக்கிறது: திக்விஜய் சிங்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் சேருவதை தெலங்கானா காவல்துறை ஊக்குவிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் சேருவதை தெலங்கானா காவல்துறை ஊக்குவிக்கிறது: திக்விஜய் சிங்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் சேருவதை தெலங்கானா காவல்துறை ஊக்குவிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுட்டுரை சமூகவலைதளத்தில் திக்விஜய் சிங் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரில் தெலங்கானா காவல்துறை போலி இணையதளத்தை ஆரம்பித்துள்ளது. இதன்மூலம், முஸ்லிம் இளைஞர்களை தெலங்கானா காவல்துறை தீவிரவாதிகளாக்குகிறது. மேலும், முஸ்லிம் இளைஞர்கள் ஐஎஸ் குழுக்களாவதை ஊக்குவிக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாபூரில் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்தான், இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். கான்பூரில் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்ததற்கும் இதுதான் காரணம்.
அந்த இணையதளத்தில் ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிடுவதன்மூலம், முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்க தெலங்கானா காவல்துறை முயலுகிறதா? இது சரிதானா? ஐஎஸ் அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் சேருவதை ஊக்குவிக்க காவல்துறைக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளாரா? என்று அந்தப் பதிவுகளில் திக்விஜய் சிங் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவரது இந்த கருத்துகள் சரச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு தெலங்கானா காவல்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுட்டுரையில் தெலங்கானா காவல்துறை தலைவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், "மூத்த பொறுப்பான தலைவரிடம் இருந்து பொய்யான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தேச விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் மனவுறுதி, நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
திக்விஜய் சிங்கின் கருத்துக்கு தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில அமைச்சரும், முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி. ராமா ராவ் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "முன்னாள் முதல்வரிடம் இருந்து மிகவும் பொறுப்பற்ற, கண்டிக்கத்தக்க கருத்து வெளிவந்துள்ளது; இந்தக் கருத்தை உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி திக்விஜய் சிங் திரும்பப் பெற வேண்டும் அல்லது நிரூபிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் திக்விஜய் சிங்குக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com