பாஜக-வை வீழ்த்த 2019 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: லாலு பிரசாத்

வரும் 2019-இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்
பாஜக-வை வீழ்த்த 2019 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: லாலு பிரசாத்

ராஜகிருஹம்: வரும் 2019-இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் கட்சித் தொண்டர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் பிகார் மாநிலம், ராஜகிருஹம் நகரில் தொடங்கியது.
இதில், லாலு பிரசாத் பங்கேற்றுப் பேசியதாவது:

பிகாரில், நிதீஷ் குமாரை ஒரு காலத்தில் கடுமையாக எதிர்த்தேன். எனினும், பாஜக-வை வீழ்த்துவதற்காக நிதீஷ் குமாருடன் சேர்ந்து கடந்த 2015-இல் மகா கூட்டணியை உருவாக்கினேன்.

அதேபோன்று, வரும் 2019-இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.

இதுதொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிஸாமுதல்வர் நவீன் பட்நாயக், சமாஜவாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோருடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என்றார் லாலு பிரசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com