ஆதார் அடிப்படையில் மின் கட்டணம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து மின்னணு முறையில் மின் கட்டணத்தைச் செலுத்த வாடிக்கையாளர்களிடம் கோருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து மின்னணு முறையில் மின் கட்டணத்தைச் செலுத்த வாடிக்கையாளர்களிடம் கோருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் மின்சாரத் துறை, எரிசக்தி, சுரங்கத் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
வங்கிக் கணக்கில் இருந்து மின்னணு முறையில் மின் கட்டணத்தைச் செலுத்தினால், அனைத்து வகையிலும் அது எளிதான இருக்கும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் மின்னணு முறையில் மின் கட்டணத்தைச் செலுத்துமாறு மத்திய அரசு கூறுகிறது. எனினும், இது கட்டாயமில்லை.
ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறுவதும் நுகர்வோரின் நலன் சார்ந்ததுதான். இதில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் முனைப்புக் காட்ட வேண்டும்.
மாநிலங்களுக்கான மின்சாரப் பகிர்வுத் திட்டத்தை மத்திய அரசு மாற்றியமைக்க உள்ளது.
இது தொடர்பாக திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அது சிறப்பானதாகவும், அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையிலும் அமையும். அணுமின் நிலையம் அமைக்க இசைவளிக்கும் மாநிலங்களுக்கு அவற்றில் இருந்து கிடைக்கும் மின்சாரம் அதிக அளவில் வழங்கப்படும்.
அதே நேரத்தில் தங்கள் மாநிலத்தில் அணுமின் நிலையத்தை அனுமதிக்காமல், அண்டை மாநிலங்களில் இருந்து அதிக மின்சாரத்தைக் கோர அனுமதிக்கப்பட மாட்டாது. இதுதான் புதிய மின் பகிர்மானத் திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com