குவாஹாட்டி ரயில் நிலையத்தில் 20 கிலோ தங்கம் பறிமுதல்

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி ரயில் நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி ரயில் நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக, குவாஹாட்டி ரயில் நிலையக் கண்காணிப்பாளர் பங்கஜ் கலிதா கூறியதாவது:

திரிபுரா தலைநகர் அகர்தலாவிலிருந்து தில்லி வரை செல்லும் திரிபுரசுந்தரி விரைவு ரயில் குவாஹாட்டி ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் வந்தது. அப்போது, ரயில்வே போலீஸார் அந்த ரயிலில் ஏறி பயணிகளிடம் வழக்கமான சோதனையை மேற்கொண்டனர்.

இதில், பயணிகள் 4 பேரிடமிருந்து தலா 3 தங்கக் கட்டிகள் வீதம் மொத்தம் 12 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 20 கிலோ எடையிலான அந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 6 கோடி ஆகும்.

விசாரணையில், அவர்கள் மூவரும் அகர்தலாவில் ரயில் ஏறியதும், மியான்மரிலிருந்து தங்கம் கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின் நால்வரும் சுங்க வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கமும் சுங்க வரித் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.
இதற்கு முன், குவாஹாட்டி விமான நிலையத்தில் கடந்த 2015-இல் ரூ. 9 கோடி மதிப்பிலான 37 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com