கேரள நதிகளை தமிழக நதியுடன் இணைக்கக் கூடாது

'நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ், கேரளத்திலுள்ள பம்பை, அச்சன்கோயில் நதிகளை தமிழகத்திலுள்ள வைப்பாறு நதியுடன் இணைக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்'
கேரள நதிகளை தமிழக நதியுடன் இணைக்கக் கூடாது

'நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ், கேரளத்திலுள்ள பம்பை, அச்சன்கோயில் நதிகளை தமிழகத்திலுள்ள வைப்பாறு நதியுடன் இணைக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைப்பு தொடர்பாக கேரள சட்டப் பேரவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு, பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூரவமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: பம்பை, அச்சன்கோயில் நதிகளை தமிழகத்திலுள்ள வைப்பாறு நதியுடன் இணைக்கக் கூடாது என்ற கேரளத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. கேரள அரசின் பிரதிநிதிகள், இதுகுறித்து தேசிய நதி நீர் மேம்பாட்டு ஆணையத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பலமுறை எடுத்துரைத்துள்ளனர்.
இந்நிலையில், கேரள அரசின் ஒப்புதலின்றி பம்பை - அச்சன்கோயில் - வைப்பாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று தேசிய நதி நீர் மேம்பாட்டு ஆணையம் உறுதியளித்துள்ளது. நதிகள் இணைப்பு தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே ஆணையத்திடம் கோரியுள்ளோம் என்றார் பினராயி விஜயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com