புணே பெண் என்ஜினீயர் பாலியல் பலாத்கார வழக்கு: 3 பேருக்கு மரண தண்டனை

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் பெண் என்ஜினீயர் நயனா புஜாரியை (28) கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு புணே நகர சிறப்பு

புணே: மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் பெண் என்ஜினீயர் நயனா புஜாரியை (28) கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு புணே நகர சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதுதொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு:
நயனா புஜாரியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யோகேஷ் ராவத், மகேஷ் தாக்குர், விஷ்வாஸ் காதம் ஆகியோருக்கு எதிராக சரியான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவர்கள் செய்த இத்தகைய கொடூரமான செயலுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும். மனிதத்தன்மையற்ற, இரக்கமில்லாமல் செய்த இந்தக் குற்றம் சமூகத்தில் நடைபெறும் அரிதினும் அரிதான குற்றச் செயலாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

3 பேரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனவே, அவர்களை சாகும் வரையில் தூக்கிலிடுமாறு உத்தரவிடுகிறேன். மேலும், 3 பேரும் தலா ரூ.19,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புணே புறநகர் பகுதியான கராடியில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் நயனா புஜாரி கடந்த 2009-ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்தார். அந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி பேருந்துக்காக சஅவர் காத்திருந்தபோது, அந்த வழியாக வந்த 3 பேர் காரில் கடத்திச் சென்றனர்.

பின்னர், நயனாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கொடூரமான முறையில் கொலை செய்தனர். அத்துடன், அவரது கைப்பையில் இருந்த பணம்
மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் அவர்கள் திருடிச் சென்றனர்.

இந்த வழக்கில் 4 பேருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. இவர்களில் நான்காவது நபரான ராஜேஷ் சௌதரி அப்ரூவராக மாறியதை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com