தென் கொரியாவின் புதிய அதிபர் மூன்-ஜேயினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன் ஜேயின்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவின் புதிய அதிபர் மூன்-ஜேயினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதுதில்லி: தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன் ஜேயின்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில், முன்னாள் பெண் அதிபர், பார்க் குன் ஹை, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் கொரிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, மூன் ஜேயின், 41 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, நேற்று அவர், அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார் மூன் ஜேயின்.

புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மூனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆங்கிலம் மற்றும் கொரிய மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், விரைவில் மூன் ஜெயினை நேரில் சந்தித்து, அவருடன் பணியாற்ற விரும்புவதாக தனது பதிவில் மோடி கூறியுள்ளார்.

    I look forward to meeting H.E. Mr. Moon Jae-in soon and also look forward to working closely as special strategic partners. @MoonJaeIn365

    — Narendra Modi (@narendramodi) May 10, 2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com