இரு தரப்பு ஒத்துழைப்பு: இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை

இந்தியா - ரஷியா இடையே அணுசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது.
தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை புதன்கிழமை சந்தித்துப் பேசிய ரஷிய துணைப் பிரதமர் டிமித்ரி ரோகோசின்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளைச் சேர்ந்த தொழில், வர்த்தகம் மற்றும் அணுசக்தித் துறையின் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, பல்வேறு புதிய துறைகளிலும் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு அதிகரிப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இதுதவிர, இந்தியா வந்துள்ள ரஷிய துணைப் பிரதமர் டிமித்ரி ரோகோசின், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து பின்னர் கருத்துத் தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த மாதம் ரஷியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதினை ஜூன் 1-ஆம் தேதி சந்தித்துப் பேச இருக்கிறார். அப்போது, இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அவை குறித்து முடிவு செய்வதற்காக இந்தப்
பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com