பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதி

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வருமான வரித்துறை சார்பில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருமான வரித் துறையின் இணையதளத்தின் மூலம் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை எளிதில் இணைக்க முடியும்.
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதி

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வருமான வரித்துறை சார்பில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருமான வரித் துறையின் இணையதளத்தின் மூலம் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை எளிதில் இணைக்க முடியும்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை வருமான வரித் துறை கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில், இந்த இணைப்புக்கான வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி https://incometaxindiaefiling.gov.in  என்ற இணையதள முகவரியில் ஆதார் இணைப்புக்காக சிறப்பு வசதி உள்ளது. அதில், பான் எண், ஆதார் எண், ஆதார் அட்டையில் உள்ள பெயர் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்வதன் மூலம் ஒரு நிமிடத்துக்குள் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க முடியும். இணைப்பு முடிந்த பிறகு வெற்றிகரமாக இணைக்கப்பட்ட தகவல் உறுதி செய்யப்படும்.
பான் அட்டையில் உள்ள பெயருக்கும், ஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள பெயருக்கும் எதாவது சிறு வேறுபாடுகள் இருந்தால், ஆதார் எண் பெற்றபோது அளித்த செல்லிடப்பேசி எண்ணுக்கும், இ-மெயில் முகவரிக்கும் ரகசிய எண் அனுப்பப்படும். அதனை உள்ளீடு செய்வதன் மூலம் பான் கார்டுடன், ஆதாரை இணைக்க முடியும்.
பான் அட்டையில் உள்ள பெயருக்கும், ஆதார் அட்டையில் உள்ள பெயருக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், இணைப்பு நடைபெறாது. எதாவது ஒரு அட்டையில் பெயரை சரியாக மாற்றிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
வரும் ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து பான் அட்டைக்கு விண்ணபிக்க ஆதார் அட்டையை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. அதே நேரத்தில் வருமான வரித் தாக்கலின்போது ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாகும்.
இதுவரை 1.18 கோடி பான் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com