முஸ்லிம் மத போதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி மையத் தடையை உறுதி செய்தது சிறப்புத் தீர்ப்பாயம்

சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய மத ஆராய்ச்சி மையத்துக்கு மத்திய அரசு விதித்தத் தடையை சிறப்புத் தீர்ப்பாயம்

புது தில்லி: சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய மத ஆராய்ச்சி மையத்துக்கு மத்திய அரசு விதித்தத் தடையை சிறப்புத் தீர்ப்பாயம் உறுதி செய்தது.

இந்திய இறையாண்மைக்கும், தேசத்தின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்தின் மூலம் நடைபெறுவது கண்டறியப்பட்டதால், அந்த மையத்துக்கு 5 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது.

அந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தை அந்த அமைப்பு அணுகியது. எனினும், அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாகீர் நாயக்கின் அமைப்பு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த சிறப்புத் தீர்ப்பாயம், மத்திய அரசின் தடை உத்தரவை மீண்டும் உறுதி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com