யோகி ஆதித்யநாத் தலைமையில் குற்றங்களை கண்காணிக்கும் சிறப்புப் பிரிவு விரைவில் தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் குற்றங்களை கண்காணிக்கும் சிறப்புப் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையில் குற்றங்களை கண்காணிக்கும் சிறப்புப் பிரிவு விரைவில் தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் குற்றங்களை கண்காணிக்கும் சிறப்புப் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக, மாநில எரிசக்தித் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா வெள்ளிக்கிழமை கூறியதாவது: யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, உத்தரப் பிரதேசத்தில் சாதாரண குடிமகனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 50 நாள்களில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதல்வரின் அலுவலகத்தில் குற்றங்களை கண்காணிக்கும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட உள்ளது.
யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட முறையில் இந்தப் பிரிவை மேற்பார்வையிடுவார்.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாக சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. குற்றவாளிகளையும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களையும் தங்களுடைய கார்களில் அழைத்துச் சென்ற சமாஜவாதி கட்சித் தலைவர்கள் இதுகுறித்து சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பாஜக எம்எல்ஏ, கோரக்பூரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருடன் மோதலில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. உண்மையில், அந்த அதிகாரி கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் அனைத்து எம்எல்ஏக்களும், அதிகாரிகளிடம் குறிப்பாக பெண்களிடம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார். சஹாரன்பூரில் மத ரீதியிலான பிரச்னை நிலவுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஸ்ரீகாந்த் சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com