பிரணாப், மோடிக்கு நீதிபதி கர்ணன் கடிதம்

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் மன்னிப்பு கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்
பிரணாப், மோடிக்கு நீதிபதி கர்ணன் கடிதம்

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் மன்னிப்பு கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோருக்கு சர்ச்சைக்குரிய நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடிதம் எழுதியுள்ளனர்.
இதேபோல், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிததத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு எனக்கு இழைத்த அநீதியால் தாங்க இயலாத வலியுடனும், கனத்த இதயத்துடனும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்யாத குற்றத்துக்காக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, எனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்து, குற்றவாளியாக அறிவித்திருக்கிறது.
நீதிபதி பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல்களில் ஈடுபட்ட எனது சக நீதிபதிகளுக்கு எதிராகவே குரல் கொடுத்தேன்.
இன்றைய சூழலில் நீதிபதி ஒருவர் மனசாட்சிப்படி நீதியை விற்க விரும்பினால், அதை அவர் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் செய்ய முடியும். ஆனால், நீதித் துறையில் நடைபெறும் முறைகேடுகளை அந்தத் துறையைச் சேர்ந்த ஒருவரே தட்டிக் கேட்டால், அவர் சிறைக்கு அனுப்பப்படுவார்.
குடியரசுத் தலைவர்தான் என்னை நீதிபதியாக நியமித்தார். அவர் மட்டுமே எனது பதவியைப் பறிக்க முடியும். அப்படியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் எனக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இது எனக்கு மட்டுமல்ல, எனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் பொருந்தும். அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தவறாகப் பயன்படுத்தியது மட்டுமன்றி, இந்திய அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றத்தின் விதிகள் ஆகியவற்றையும் மீறியுள்ளனர்.
சட்டத்துக்குப் புறம்பாக எனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை குறித்தும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான புகார்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி கர்ணன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com