டீசல் வாகன மாசுபாட்டால் 38,000 பேர் உயிரிழப்பு: ஆய்வில் அதிரடி தகவல்

டீசலில் இயங்கும் லாரி மற்றும் கார் வெளியிடும் அளவுக்கு அதிகமான நச்சு உமிழ்வுகளால் உலகயளவில் மனித ஆரோக்கியம் தாக்கப்பட்டிருப்பத்துடன்
டீசல் வாகன மாசுபாட்டால் 38,000 பேர் உயிரிழப்பு: ஆய்வில் அதிரடி தகவல்

டீசலில் இயங்கும் லாரி மற்றும் கார் வெளியிடும் அளவுக்கு அதிகமான நச்சு உமிழ்வுகளால் உலகயளவில் மனித ஆரோக்கியம் தாக்கப்பட்டிருப்பத்துடன் 2015-ஆம் ஆண்டில் மட்டும் 38,000 பேர் உயிரிழந்துள்ளது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுசான் அனென்பெர்க் அமெரிக்க சுற்றுச்சூழல் சுகாதார அனலிட்டிக்ஸ் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒருவர் கூறியதாவது:

டீசலில் இயங்கும் அனைத்து லாரி மற்றும் கார் வாகனங்கள் மூலம் வெளியேற்றும் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு (என்ஓஎக்ஸ்) எனும் நச்சு உமிழ்வு அதிகமாக காணப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் அதிகப்படியான 4.6 மீட்டர் டன் உமிழ்வுகளை வெளியிட்டுள்ளன.

இதனால், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதயம் மற்றும் நுரையீரல் நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு குறைந்தபட்சம் 38 ஆயிரம் அபரிமிதமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதில், பெரும்பாலான உயிரிழப்புகள் ஐரோப்பாவில் நிகழ்கின்றன. நச்சு உமிழ்வுகளை வெளியேற்றும் டீசலில் இயங்கும் லாரி மற்றும் கார் வாகனங்கள் சீனா, இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அதிகமாக பாதிப்புகள் காணப்படுகிறது.

சட்ட விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சு உமிழ்வுகள் வெளியேறினாலும், ஆண்டுக்கு 70,000 உயிரிழப்புகள் ஏற்படும். இதற்கு அதிகமான என்ஓஎக்ஸ் நச்சு உமிழ்வுகள் அதிகரித்து வருவதே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், 2040 இல் ஏற்பட உள்ள 174,000 உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக கடுமையான மாசு கட்டுப்பாடு விதிகளை கொண்டு வர வேண்டும்.

என்ஓஎக்ஸ் நச்சு உமிழ்வு "அமில மழைப் பொழிவுக்கு' காரணமாக இருப்பதுடன், அது அமோனியாவுடன் இணையும்போது உண்டாகும் சிறு துகள்கள் காற்று வழியே மனிதனின் நுரையீரல் வரை பரவி, புற்றுநோய் உண்டாவதற்கும், நாள்பட்ட சுவாசப் பிரச்னைகளுக்கும், அகால மரணங்களுக்கும் வழிவகுக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

"இந்த கடுமையான பாதிப்பு மோட்டார் உற்பத்தியாளர்களின் பொறுப்பற்ற செயல்களிலிருந்து நேரடியாக நிகழ்ந்துள்ள தீவிர விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது" என்று பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் சுகாதார நிபுணர் பேராசிரியர் ராய் ஹாரிசன் கூறினார். "இது பொது சுகாதாரத்திற்கான முழு விளைவுகளையும் குறைத்து மதிப்பிடக்கூடும் என்றும் கூறினார்."

இந்த புதிய ஆராய்ச்சியின் மூலம் உலகில் உள்ள 80 சதவீத டீசல் வாகனங்கள், அதாவது, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் ரஷ்யா உள்ளிட்ட கார் சந்தைகளில் இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதில், எந்த நாடுகளிலும் வெளியான உமிழ்வுகளில் தரமும் கிடையாது, என்ஓஎக்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்ப உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கையை அதிகமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

"இந்த முக்கியமான ஆய்வுக்கு ஐரோப்பிய ஒன்றியங்களில் இயங்கும் டீசல் கார்களால் வெளியிடப்பும் நச்சு உமிழ்வு உயிரிழப்புகளே காரணம்" இவை, அதிகமான என்ஓஎக்ஸ் நச்சு உமிழ்வுகளால் ஏற்பட்டுள்ள விளைவைக் காட்டுகிறது என்று லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் குழந்தை சுவாசம் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவம் நிபுணர் பேராசிரியர் ஜோனதன் க்ரிக் கூறினார். மேலும், என்ஓஎக்ஸ் நச்சு உமிழ்வு இங்கிலாந்தின் அவசர பொது சுகாதார பிரச்னை என்று கூறப்படுகிறது."

கார்கள் மற்றும் லாரிகள் அளவுக்கு அதிகமான நச்சு உமிழ்வுகளை வெளியேற்றியதால் சென்ற 2015-இல் மட்டும் 1.07 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 38,000 பேர் உயிரிழந்தனர்.

குறிப்பாக, லாரிகள் மற்றும் பேருந்துகள் அளவுக்கு அதிகமான என்ஓஎக்ஸ் நச்சை வெளியேற்றுகின்றன. 90 சதவீத நச்சுப் புகை வெளியேற்றத்துக்கு பிரேசில், சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளே முக்கிய காரணம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் வேன், சிறிய ரக லாரி உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மூலம் 70 சதவீத என்ஓஎக்ஸ் நச்சுப் புகை வெளியேற்றப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அந்த ஆய்விதழில் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதத்தில், எம்.ஐ.டி.யிலுள்ள அமெரிக்க ஆய்வாளர்கள் வாகனங்களில் இருந்து வெளியான அதிகமான உமிழ்வுகளே 2008 மற்றும் 2015 க்கு இடையில் ஐரோப்பாவில் 1,200 ஆரம்ப உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாக மதிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com