எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: ராணுவ வீரர் ஒருவர் பலி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: ராணுவ வீரர் ஒருவர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச மாவட்டத்தில் உள்ள பாலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இன்று மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொத்து வருகின்றனர்.

அதேசமயம், ராணுவ வீரர்கள், போலீஸார் என சுமார் 1000 வீரர்கள் கூட்டு நடவடிக்கையாக அம்மாநிலத்தின் சோபியன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷிர்மல் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று ரியாசி பகுதியில் பாதுகாப்பு இராணுவ வீரரான நாயக் அசோக், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நாயக் அசோக் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் அண்மையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரின் உடல்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிதைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com