குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் தடை 

இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு  வெளியாகியுள்ளது.
குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் தடை 

புதுதில்லி:  இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு  வெளியாகியுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு சற்று முன் தீர்ப்பை வாசித்தனர்.

அதன்படி குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்தியாவின் மனு சர்வதேச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியத் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டார். ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து அந்த நீதிமன்றத்தில், பாகிஸ்தான் சார்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி முகமது ஃபைசல் முன்வைத்த வாதத்தில் இந்தியா மனுத் தாக்கல் செய்துள்ளது தேவையற்றது. விஷயங்களை சரியாக புரிந்துகொள்ளத் தவறியதால்தான் அவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தை அரசியல் நாடகம் நடத்தும் இடமாக இந்தியா பயன்படுத்துகிறது. ஆனால், நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம். ஜாதவின் கடவுச்சீட்டில் ஒரு முஸ்லிமின் பெயர் இடம்பெற்றுள்ளது தொடர்பாக இந்தியாவால் உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை என்று அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில் இன்று சர்வதேச நீதிமன்றம் தீர்பை வழங்கியது.

அதன்படி குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் வாதங்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com