தெரு நாய்களை அடித்துக் கொன்ற ராணுவ அதிகாரிக்கு எதிராக புகார்

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் 3 தெரு நாய்களை அடித்துக் கொன்ற ராணுவ அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ராணுவத்
தெரு நாய்களை அடித்துக் கொன்ற ராணுவ அதிகாரிக்கு எதிராக புகார்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் 3 தெரு நாய்களை அடித்துக் கொன்ற ராணுவ அதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத்திடம் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது:
டேராடூனில் மேஜர் மணீஷ் தபா என்பவர் கடந்த 11-ஆம் தேதி தனது வளர்ப்பு நாயுடன் வெளியே சென்றார். அப்போது, மற்றொரு ராணுவ அதிகாரி தெரு நாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்ற அவரது நாயைக் கண்டவுடன் தெரு நாய்கள் குரைத்தன.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த மணீஷ் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் 3 தெரு நாய்களை அடித்துக் கொன்றார். 2 நாய்கள் காயங்களுடன் உயிர் தப்பின என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அதற்கு அடுத்த தினமே விலங்குகள் நல ஆர்வலர்கள்  பூஜா பஹுகாண்டி காவல்நிலையத்திவ் அளித்த புகாரின்பேரில் மணீஷுக்கு எதிராக காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்தது.

எனினும், அவரது இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்து 2 ஆயிரம் கையொப்பங்கள் அடங்கிய புகார் மனு சமூக வலைதளமான முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில், மணீஷுக்கு எதிராக விபின் ராவத் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com