ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்ய கோரிய நீதிபதி கர்ணனின் கோரிக்கை நிராகரிப்பு!

தனக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்ய கோரிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தற்பொழுது நிராகரித்துள்ளது.
ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்ய கோரிய நீதிபதி கர்ணனின் கோரிக்கை நிராகரிப்பு!

புதுதில்லி: தனக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்ய கோரிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தற்பொழுது நிராகரித்துள்ளது.

சக நீதிபதிகளின் மீதான ஊழல் குற்றசாட்டு குறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய விவகாரத்தை தொடர்ந்து, நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். அதன் உச்சகட்டமாக நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால் ஆத்திரமடைந்த உச்ச நீதிமன்றம் நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் கர்ணனைக் கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில் தனது வழக்கறிஞர் மூலம் தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கர்ணனின் இந்த மேல் முறையீட்டு மனுவை தற்பொழுது உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இனி மேல் முறையீடுக்கு வாய்ப்பில்லை என தெரிவித்த உச்ச நீதிமன்ற பதிவாளர், நீதிபதி கர்ணனின் கோரிக்கையை நிராகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com