இஸ்ரோவுக்கு இந்திரா காந்தி அமைதி பரிசு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) 2014-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
விருதுடன் அளிக்கப்படும் ரூ.1 கோடிக்கான காசோலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் இஸ்ரோ அமைப்பின் தலைவர் கிரண் குமார்.

துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலான தேர்வுக் குழு, இந்த விருதுக்கு இஸ்ரோ அமைப்பை கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்வு செய்தது.
இஸ்ரோ அமைப்பின் சார்பில் அதன் தலைவர் கிரண் குமார், இந்த விருதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து பெற்றுக் கொண்டார். விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்ததற்காக இந்த விருது அந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தியின் ஓவியம் இடம்பெற்றுள்ள கோப்பை, பாராட்டுச் சான்றிதழ், ரூ.1 கோடி ரொக்கம் ஆகியவை இந்த விருதில் அடங்கும்.
கடந்த 2015-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி விருதுக்கு
ஐ.நா.வின் அகதிகளுக்கான ஆணையம் தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை அந்த அமைப்பிடம் கடந்த ஆண்டு மன்மோகன் சிங் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com