அணு சக்தி மூலக்கூறுகளை அணு ஆயுதம் தயாரிக்க இந்தியா தவறாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

அமைதி நோக்கங்களுக்காக மற்ற நாடுகளிடம் இருந்து பெறப்படும் அணுசக்திக்கான மூலக் கூறுகளை அணு ஆயுதம் தயாரிக்க இந்தியா தவறாகப் பயன்படுத்துகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

அமைதி நோக்கங்களுக்காக மற்ற நாடுகளிடம் இருந்து பெறப்படும் அணுசக்திக்கான மூலக் கூறுகளை அணு ஆயுதம் தயாரிக்க இந்தியா தவறாகப் பயன்படுத்துகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா, இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மற்ற நாடுகளில் இருந்து செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா அணுசக்திக்கான எரிபொருள், அது தொடர்பான சாதனங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறக்குமதி செய்து கொண்டது. அதேபோல், இந்தியா மீது அணுசக்தி விவகாரத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பு (என்எஸ்ஜி) நீக்கியதைத் தொடர்ந்தும் இந்தியாவுக்கு அணுசக்திக்கான எரிபொருள்கள் உள்ளிட்டவை கிடைத்தன.
இவ்வாறு அமைதி நோக்கங்களைக் காரணம்காட்டி பெறப்பட்ட அணுசக்தி மூலக்கூறுகளை இந்தியா தவறாகப் பயன்படுத்தி வருவதை பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வலியுறுத்திக் கூறி வருகிறது.
இது தொடர்பாக நாங்கள் எழுப்பி வந்துள்ள கவலைகள் புதியவையும் அல்ல, அவை ஆதாரமற்றவையும் அல்ல. இவ்வாறு அணுசக்தி மூலக்கூறுகளை இந்தியா தவறாகப் பயன்படுத்துவது என்பது அணு ஆயுதப் பரவல் என்ற தீவிரமான பிரச்னைக்கு வழிவகுப்பதோடு, தெற்காசியாவின் நிலைத்தன்மை, பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியாவின் அணு ஆயுதத் திட்டமானது உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் அணு ஆயுதத் திட்டம் என்பதை ஊடகங்களில் வெளிவந்துள்ள பல்வேறு செய்திகளும், அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வார்டு கென்னடி கல்லூரி வெளியிட்ட அறிக்கை போன்றவையும் உறுதிப்படுத்துகின்றன. அண்மையில் வெளியான பெல்ஃபர் அறிக்கையில் '2,600 அணு குண்டுகளைத் தயாரிப்பதற்கான அணுசக்தி மூலக்கூறுகளை இந்தியா வாங்கிக் குவித்துள்ளது' என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தியாவுக்கு அணுசக்தி மூலக்கூறுகளை அனுப்பி வைப்பது குறித்தும், எஸ்எஸ்ஜியில் உறுப்பினராவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சி குறித்தும் பரிசீலிப்பதற்கு முன்பு மேற்கண்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள கவலைகளை கவனத்தில் கொள்ளும் பொறுப்பு அந்த அமைப்புக்கு உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com