உத்தரகண்ட்: புனித யாத்திரை பாதையில் கடும் நிலச்சரிவு; 15 ஆயிரம் பக்தர்கள் பாதிப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 15 ஆயிரம்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் தவித்துவருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பிரதேசமான பத்ரிநாத்தில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள விஷ்ணுபிரயாக் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டுள்ளதால் பக்தர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த 2013-ம் ஆண்டில் இம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1000-க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள விஷ்ணுபிரயாக் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் என முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும், நிலச்சரிவால் 1,800 சுற்றுலா பயணிகள் மட்டுமே பாதிப்படைந்துள்ளனர் என விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com