எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருங்கள்: கட்சித் தலைவர்களுக்கு மம்தா உத்தரவு

எந்த சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராக இருங்கள் என்று கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருங்கள்: கட்சித் தலைவர்களுக்கு மம்தா உத்தரவு

எந்த சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராக இருங்கள் என்று கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானதை அடுத்து மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள்,
உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மம்தா பேசியது குறித்து கட்சித் தலைவர்கள் பின்னர் கூறியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒட்டுமொத்தமாக முடக்கிவிட வேண்டுமென்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும்.
பாஜகவை எதிர்கொள்ளும் வகையில் சமூக வலைதளங்களில் நமது கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம்தான் பாஜக தீய பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
கட்சியினர் மாநில மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். மாநில அரசின் திட்டங்களின் பயன்களை மக்களிடம் முழுமையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com