சத்தீஸ்கர் வனப் பகுதிக்கு மறைந்த மத்திய அமைச்சர் தவே பெயர்!

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்திலுள்ள வனப் பகுதிக்கு, மறைந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவின் பெயர் சூட்டப்படும் என்று அந்த மாநில முதல்வர் ரமண் சிங்
மறைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவின் இறுதிச் சடங்குகள், மத்தியப் பிரதேச மாநிலம், ஹோஷங்காபாத் மாவட்டத்திலுள்ள நர்மதை நதிக்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன
மறைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவின் இறுதிச் சடங்குகள், மத்தியப் பிரதேச மாநிலம், ஹோஷங்காபாத் மாவட்டத்திலுள்ள நர்மதை நதிக்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்திலுள்ள வனப் பகுதிக்கு, மறைந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவின் பெயர் சூட்டப்படும் என்று அந்த மாநில முதல்வர் ரமண் சிங் அறிவித்துள்ளார்.
துர்க் மாவட்டம், சங்க்ரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் ரமண் சிங் பங்கேற்றார். பின்னர், அவர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
இதுதொடர்பாக மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சங்க்ரா கிராமத்தில் சுமார் 44 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள வனப் பகுதியை முதல்வர் பார்வையிட்டார். நெல்லி, வேம்பு, அரசு, கடம்பு உள்ளிட்ட மரங்கள் நிறைந்த அந்த வனப்பகுதிக்கு, மறைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் அறிவித்தார் என்றார் அந்த அதிகாரி.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே, உடல் நலக் குறைவு காரணமாக தில்லியில் வியாழக்கிழமை காலமானார். தனது நினைவாக ஏதாவது ஒரு இடத்தில் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நடப்பட வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று தவே கூறியிருந்தார்.
உடல் தகனம்: இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலம், ஹோஷங்காபாத் மாவட்டத்திலுள்ள பாந்த்ராபானில் நர்மதை நதிக்கரையில் அனில் மாதவ் தவேவின் உடல் முழு அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தனது சொந்த ஊரில் (பாந்த்ராபான்) நர்மதை நதிக்கரையில் தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என்பதையும் கடைசி ஆசைகளில் ஒன்றாக அனில் மாதவ் கூறியிருந்தார்.
இறுதிச் சடங்கில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ வர்தன், உமா பாரதி, அனந்த குமார், நரேந்திர சிங் தோமர், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் பையாஜி ஜோஷி, தத்தாத்ரேய ஹொசபலே, சுரேஷ் சோனி, பாஜக பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்கீய உள்ளிட்டோர் பங்கேற்று, தவேவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com