மருத்துவம், சுகாதாரத்தில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

மருத்துவம் மற்றும் சுகாதாதரத்தில்  இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா 154வது இடத்தில் இருப்பதாகவும் லான்சென்

மருத்துவம் மற்றும் சுகாதாதரத்தில்  இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா 154வது இடத்தில் இருப்பதாகவும் லான்சென் என்ற சர்வதேச மருத்துவ நாளிதழ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மொத்தம் 195 நாடுகளில் உள்ள மருத்துவ வசதிகள், சுகாதாரத் திட்டங்கள் குறித்து இந்த நாளிதழ் ஆய்வு மேற்கொண்டது. இதில், இந்தியா மருத்துவம் மற்றும் சுகாதார  வசதிகளில் 154வது இடத்தில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் மருத்துவ வசதிகள் பின்தங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசநோய், சர்க்கரை நோய், இருதய நோய்கள், நீண்டநாள் சிறுநீரக நோய்கள் ஆகிய துறைகளில் இந்தியாவின் செயல்பாடு எத்ரிபார்த்ததைவிட மோசமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த 25 ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளின் தரம் இந்தியாவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென்கொரியா, பெரு, சீனா ஆகிய நாடுகள் மருத்துவ வசதிகளில் பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா 82வது இடத்தை பிடித்துள்ளது.  

வளர்ச்சியடைந்த நாடுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா 35வது இடத்தையே பிடித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனுக்கு 30வது இடத்திற்கும் கீழேயே உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com