விரைவில் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்!

இந்தியாவின் மிகவும் அதிக எடை கொண்ட ஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக்கோளைச் சுமந்தபடி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது

இந்தியாவின் மிகவும் அதிக எடை கொண்ட ஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக்கோளைச் சுமந்தபடி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் கருதப்படுகிறது. இதன் மூலம், எந்த வெளிநாட்டையும் சார்ந்திருக்காமல், மிகப்பெரிய செயற்கைக்கோள்களை நம்மால் ஏவ முடியும்.
இந்த ராக்கெட் மூலம் 4 டன் (4,000 கிலோ) எடை வரை உள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது தற்போதைய ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட் சுமக்கக் கூடிய எடையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
தற்போது 2 டன்னுக்கும் கூடுதலான எடை கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்பக் கூடிய ராக்கெட்டுகள் இந்தியாவிடம் இல்லை. எனவே, அத்தகைய செயற்கைக்கோள்களை ஐரோப்பிய ராக்கெட்டுகள் மூலம்தான் நம் நாடு விண்ணில் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை இந்தியாவின் மிகவும் அதிக எடை கொண்ட (3.2 டன்) ஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக்கோளைச் சுமந்தபடி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அந்த ராக்கெட்டுடன் கிரையோஜெனிக் என்ஜின் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைத்தின் இயக்குநர் கே.சிவன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
இன்னும் ஒரு வார காலத்துக்குள் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டுடன் ஜிசாட்-19 செயற்கைக்கோளை நாங்கள் இணைத்து விடுவோம். இந்தச் செயற்கைக்கோளை ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த தீர்மானித்துள்ளோம்.
எனினும், அதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை. இந்தச் செயற்கைக்கோள், அதைச் செலுத்த உள்ள ராக்கெட் ஆகிய இரண்டுமே அதிநவீனமானவை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com