ஈரான் அதிபராக மீண்டும் ரெளஹானி தேர்வு: பிரதமர் மோடி வாழ்த்து

ஈரான் நாட்டு அதிபராக ஹசன் ரெளஹானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டு அதிபராக ஹசன் ரெளஹானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது தலைமையில் புதிய உச்சங்களை ஈரான் எட்டிப் பிடிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. 68 வயதான ஹசன் ரெளஹானிக்கும் மத குருமாரான இப்ராஹிம் ரெய்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது. இதில் தற்போதைய அதிபர் ரெளஹானி வெற்றி பெற்று அப்பதவியை தக்கவைத்துக் கொண்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) ஆங்கிலம் மற்றும் பெர்சீய மொழிகளில் வாழ்த்துச் செய்தியை பிரதமர் மோடி பதிவிட்டுள்
ளார்.
இதுதொடர்பாக அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
ஈரான் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ரெளஹானிக்கு மனமார்ந்த வாழத்துகள். அவரது ஆட்சிக் காலத்தில் அந்நாடு புதிய உச்சங்களையும், சாதனைகளையும் எட்டிப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஈரானுடனான நல்லுறவை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று இந்தியா உறுதி பூண்டுள்ளது. அந்த நிலைப்பாட்டில் திடமாகவும் உள்ளது என்று சுட்டுரையில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com