காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மாறவில்லை என்றால் மாற்றிக் காட்டுவோம்: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மாறவில்லை என்றால் மாற்றிக் காட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மாறவில்லை என்றால் மாற்றிக் காட்டுவோம்: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மாறவில்லை என்றால் மாற்றிக் காட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன எல்லை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, இமய மலையையொட்டி அமைந்துள்ள 5 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சிக்கிமில் நடைபெறுகிறது.

இன்று சிக்கிம் வந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ஆனால், இது ஒருபோதும் நடக்காது. காஷ்மீர் எங்களுடைய மாநிலம். அதில் வசிக்கும் அனைவரும் நம்முடையவர்கள். காஷ்மீர் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிரந்தரத் தீர்வு காணும்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு பதவியேற்றபோது, இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேண விரும்புவதாகக் கூறியது. ஆனால், இந்தியாவின் மீதான பார்வையில் இருந்து பாகிஸ்தானிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக இந்தியாவைச் சீர்குலைக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது.

இந்நிலையில் இருந்து பாகிஸ்தான் மாறும் என நாம் நம்புகிறோம். அப்படியும் அவர்கள் மாறவில்லை என்றால் மாற்றிக் காட்டுவோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

எல்லையில் உள்ள நதுலா சோதனைச் சாவடி, இந்திய- திபெத் போலீஸ் சோதனைச் சாவடி, இந்திய-நேபாள சோதனைச் சாவடிகளைப் பார்வையிட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com