ஜிஎஸ்டி-யின் கீழ் வரிப் பிடித்தத்தை ஒரு வாரத்துக்குள் திரும்பப் பெறலாம்

சரக்கு - சேவை வரிவிதிப்பின் (ஜிஎஸ்டி) கீழ் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் கூடுதலாகச் செலுத்திய வரியை ஒரு வாரத்துக்குள் திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது
ஜிஎஸ்டி-யின் கீழ் வரிப் பிடித்தத்தை ஒரு வாரத்துக்குள் திரும்பப் பெறலாம்

சரக்கு - சேவை வரிவிதிப்பின் (ஜிஎஸ்டி) கீழ் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் கூடுதலாகச் செலுத்திய வரியை ஒரு வாரத்துக்குள் திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் ஜூலை முதல் தேதியிலிருந்து சரக்கு - சேவை வரி அமலுக்கு வருகிறது. இந்த புதிய வரிவிதிப்பு முறையின் மூலம், ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஏற்கெனவே கூடுதலாகச் செலுத்திய வரியை 6 முதல் அதிகபட்சம் 10 நாள்களுக்குள் திரும்பப் பெறலாம்.
பணத்தை திரும்பத் தருவதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கு 6 சதவீத வட்டி வழங்கப்படும்.
சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் வரி செலுத்துவது தொடர்பாக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலிடம் வலியுறுத்தியுள்ளோம்.
பொதுவாக, சரக்கு - சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின் ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் முடிவு: கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அன்னிய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை கலைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை விரைவில் முடிவெடுக்கும் என்றார் நிர்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com