வயிற்றுப்போக்கு: உ.பி.யில் 10 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த 2 நாள்களில் 10 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த 2 நாள்களில் 10 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மலப்பா பனகாரி கூறியதாவது:
கடந்த இரண்டு நாள்களில் வயிற்றுப்போக்கு காரணமாக மட் மற்றும் சுரீர் கிராமங்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அந்த கிராமங்களுக்கு மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்களை அனுப்பும்படி மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் செங்கல் சூளையில் பணியாற்றுபவர்கள் ஆவர். எனவே, செங்கல் சூளைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு பணியாளர் நல துணை ஆணையர் பணிக்கப்பட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், சுகாதாரமற்ற நீர் வழித் தடங்களை அடைக்கும்படி குடிநீர் வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
வயிற்றுப்போக்கால் உயிரிழந்த 10 பேரில் 9 பேர் சிறுவர்கள் எனவும், மற்றொருவர் 30 வயதுப் பெண் எனவும் மாவட்ட தலைமை மருத்துவர் ஆர்.கே. நய்யார் தெரிவித்தார்.
அந்த 9 சிறுவர்களில் 5 பேர் 5 வயதுக்குள்பட்டவர்கள். மற்ற 4 பேரும் 10 முதல் 12 வயது வரை கொண்டவர்கள் எனவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com