ராணுவப் படைவீரர்கள் செயலி மூலம் குறைகளைத் தெரிவிக்கலாம்: ராஜ்நாத் சிங்

மத்திய துணை ராணுவப் படைவீரர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு மத்திய அரசு உருவாக்கியுள்ள பிரத்யேக செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்
ராணுவப் படைவீரர்கள் செயலி மூலம் குறைகளைத் தெரிவிக்கலாம்: ராஜ்நாத் சிங்

மத்திய துணை ராணுவப் படைவீரர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு மத்திய அரசு உருவாக்கியுள்ள பிரத்யேக செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

சிக்கிமில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கேய்சிங் பகுதியில் துணை ராணுவப் படைகளில் ஒன்றான எஸ்எஸ்பி-யின் 36ஆவது படைப்பிரிவு தலைமையகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் உள்ள நிலவரம் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களிடையே அவர் பேசியதாவது:
வீரர்கள் அனைவரும் தங்கள் குறைகளைத் தெரிவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பிரத்யேகமாகத் தயாரித்துள்ள செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தச் செயலியை நான் ஒவ்வொரு மாதமும் தனிப்பட்ட முறையில் பார்ப்பேன். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை நான் கவனிப்பேன் என்றார் ராஜ்நாத் சிங்.
எஸ்எஸ்பி படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் அவர் மதிய உணவு சாப்பிட்டார்.
முன்னதாக, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர் நான்கு மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளமான முகநூலில் வெளியிட்ட பதிவில், படைவீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாகக் குறை கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து சில விடியோ காட்சிகளும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் சில வீரர்களும் தங்கள் குறைகளை முகநூலில் வெளியிட்டனர்.
இதைத் தொடர்ந்து படைவீரர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காகவே மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கிய செயலியை ராஜ்நாத் சிங் இம்மாதம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com