மேகாலயாவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்பே ஆன்லைனில் கசிந்தது எப்படி?

மேகாலயாவில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நேற்றே ஆன்லைனில் கசிந்துவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேகாலயாவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்பே ஆன்லைனில் கசிந்தது எப்படி?


குவகாத்தி: மேகாலயாவில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நேற்றே ஆன்லைனில் கசிந்துவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹரியானா பள்ளிக் கல்வித் துறை வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் பட்டியல் வெளியானது. ஆனால், அது தவறான பட்டியலாக இருந்தது. உடனடியாக அந்த தவறு சரி செய்யப்பட்டது.

இந்த நிலையில், மேகாலயா பள்ளிக் கல்வித் துறையின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்த நிலையில், பேஸ்புக்கில் திங்கட்கிழமை இரவே வெளியானது. இதில் முதல் 20 ரேங்க் எடுத்த மாணவ, மாணவிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இது சரியானது அல்ல என்று அரசால் தெரிவிக்கப்பட்டது.

இது மிகவும் மோசமான விஷயம். ஆனால், வெளியே கசிந்த தகவல்கள் சரியானது அல்ல. நல்ல வேளை, முழு தேர்வு முடிவுகளும் வெளியாகவில்லை என்று தேர்வுகள் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் டி.ஆர். லாலு கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தேசிய தகவல்தொடர்பு மையத்தின் சர்வரில் இருந்து தேர்வு முடிவுகள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

தேசிய தகவல்தொடர்பு மையத்தைத் தவிர 6 இதர இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகள் கசிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com