எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றியடைந்த இந்திய இளைஞர் திரும்பும் வழியில் மரணம்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் வெற்றியடைந்த இந்தியரான ரவிகுமார், திரும்பி வரும் வழியில் உயிரிழந்தார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றியடைந்த இந்திய இளைஞர் திரும்பும் வழியில் மரணம்

காத்மண்ட்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் வெற்றியடைந்த இந்தியரான ரவிகுமார், திரும்பி வரும் வழியில் உயிரிழந்தார்.

உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்கள் இந்த சிகரத்தில் ஏறுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மலையேறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த ரவிகுமார் (27) என்பவர் சனிக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தின் 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரத்தை அடைந்து இந்திய தேசியக் கொடியைப் பறக்க விட்டுள்ளார்.

ரவிக்குமாரும், அவரது மலையேற்ற ஆலோசகரான லக்பா வோங்கியா ஷேர்பா என்பவரும் சிகரத்தில் இருந்து மலை அடிவாரத்திற்கு திரும்பும் போது தனித்தனியே பிரிந்து பாதை மாறி சென்றுள்ளனர். அதன் பின்னர் ரவிகுமார் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, மோசமான உடல்நிலையில் ரவிகுமாரின் ஆலோசர் நான்காவது முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 34 மணி நேரமாக தேடப்பட்டு வந்த ரவிக்குமார் திரும்பி வரும் வழியில் விபத்து ஏற்பட்டு 200 மீட்டர் அடி பள்ளத்தில் விழுந்து இறந்துவிட்டதாக, சுற்றுலாத்துறை துறையின் இயக்குநர் நாயகம் தினேஷ் பட்டாராய் கூறினார்.

ஆனால், அங்கு மோசமான பனிப்பொழிவு சீதோஷ்ணம் நிலவி வருவதால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு மலையேற்ற நடப்பு பருவத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

1953 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 300 பேர் எவரெஸ்ட் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்ட உடல்கள் இன்னும் மலைப்பகுதியிலேயே உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் மலையேற்ற நடப்பு பருவத்தில் 371 பேர் மலையேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com