மணிக்கு 200 கி.மீ. வரை செல்லக் கூடிய அதிவேக தேஜாஸ் ரயில்!

நாட்டிலேயே நவீன வசதிகளுடன் கூடிய மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை வேகத்துடன் செல்லக் கூடிய தேஜாஸ் ரயில், தனது முதல் பயணத்தை
மணிக்கு 200 கி.மீ. வரை செல்லக் கூடிய அதிவேக தேஜாஸ் ரயில்!

மும்பை: நாட்டிலேயே நவீன வசதிகளுடன் கூடிய மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை அதிவேகத்துடன் செல்லக் கூடிய தேஜாஸ் ரயில், தனது முதல் பயணத்தை மும்பையில் இருந்து கோவாவின் கர்மாலி வரை தொடங்கியது.

15 கோச் பெட்டிகள் கொண்ட ரயிலில் இரண்டு வகுப்புகள் நாற்காலி கார் மற்றும் நிர்வாக நாற்காலி கார் ஆகியவை அடங்கும். ரயில் முழுவதும் விமானத்தில் உள்ளது போல் இருக்கை, தானியங்கி கதவுகள், வைஃபை இணைய வசதி, சிசிடிவி கேமரா, எல்.இ.டி. திரையுடன் கூடிய தொலைக்காட்சி, தேயிலை-காபி வழங்கும் இயந்திரங்கள், உயர்தரமான கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.

சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவை எட்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் 130 கிலோமீட்டர் வேகத்தில் தேஜாஸ் ரயில் இயக்கப்படும்.

தேஜாஸ் ரயிலின் வேகம் மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேஜாஸ் ரயிலில் செல்வது விமானத்தில் பறப்பது போன்று உள்ளதாகவும், மஞ்சள் வண்ணத்தில் ஜொலிக்கும் சொகுசு ரயிலில் செல்வது தனி அனுபவம் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஏ.சி. வசதியுடன் கூடிய பெட்டிகளில் தீ தடுப்பு கருவிகள், தேநீர் எந்திரம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. உயர் வகுப்பு கட்டணமாக உணவுடன் இரண்டாயிரத்து 680 ரூபாயும், உணவில்லாமல் 2 ஆயிரத்து 525 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சாதாரண கட்டணமாக உணவுடன் ஆயிரத்து 280 ரூபாயும், உணவில்லாமல் ஆயிரத்து 155 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகம் என்றாலும் ரயிலில் உள்ள வசதிகள், சர்வதேச தரத்தில் உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பருவமழை மற்றும் பருவமழை அல்லாத பருவங்களில் ரயில் கட்டணங்களும் வேறுபடலாம்.

பருவமழை அல்லாத பருவத்தில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மற்றும் மழைக்காலத்தில் ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் எனவும் தெரிகிறது.

தேஜாஸ் ரயிலின் வேகம் மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com