மாநில ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற 31-இல் கூடுகிறது தில்லி சட்டப்பேரவை

தில்லி சட்டப்பேரவையை வரும் மே 31-ஆம் தேதி கூட்டுவதற்கு தில்லி அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

தில்லி சட்டப்பேரவையை வரும் மே 31-ஆம் தேதி கூட்டுவதற்கு தில்லி அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

தில்லி முதல்வர் கேஜரிவால் தலைமையில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தற்போதைய தில்லி சட்டப்பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் மூன்றாவது பகுதியின் ஒரு நாள் கூட்டத்தை மே 31-ஆம் தேதி கூட்ட ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. மாநில சரக்குகள், சேவைகள் வரி (எஸ்ஜிஎஸ்டி) மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய சரக்கு சேவை வரிகள் மசோதாவில் கூறியுள்ளபடி மாநிலங்களில் இந்த மசோதாவை அமல்படுத்த மாநில அளவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அந்த வகையில், மகாராஷ்டிரம், ஒடிஸா, குஜராத், ஜார்க்கண்ட், பிகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் அவற்றின் சட்டப்பேரவைகளில் மாநில ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றியுள்ளன. நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி சரக்கு, சேவைகள் வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, மாநில அரசுகள் மாநில ஜிஎஸ்டி மசோதாக்களை நிறைவேற்றினால்தான் ஜிஎஸ்டி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியும். இந்நிலையில், பிற மாநிலங்களின் வரிசையில் தில்லி அரசும் மாநில ஜிஎஸ்டி மசோதாவை பேரவையில் நிறைவேற்ற தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

தில்லி நீர் வளத் துறை அமைச்சர் பதவியில் இருந்து கபில் மிஸ்ரா இரு வாரங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கபில் மிஸ்ரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், வரும் 31-ஆம் தேதி கூடவுள்ள தில்லி சட்டப்பேரவை ஒரு நாள் கூட்டத்தொடரில் கபில் மிஸ்ரா எழுப்பியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பிரச்னை எழுப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com