சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் காலதாமதமாகாது: ஜாவடேகர்

"மத்திய இடைநிலை பள்ளிக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலதாமதமாகாது; தேர்வெழுதியவர்கள் கவலைப்படத் தேவையில்லை' என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உறுதி அளித்தார்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் காலதாமதமாகாது: ஜாவடேகர்

"மத்திய இடைநிலை பள்ளிக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலதாமதமாகாது; தேர்வெழுதியவர்கள் கவலைப்படத் தேவையில்லை' என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உறுதி அளித்தார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக சிபிஎஸ்இ உள்பட 32 கல்வி வாரியங்கள் கடந்த மாதம் அறிவித்தன.
இதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிபிஎஸ்இ-யின் முடிவை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் உண்டு என்று அறிவித்துவிட்டு, தேர்வு முடிந்த பிறகு அந்த மதிப்பெண் கிடையாது என்று சிபிஎஸ்இ அறிவித்தது நியாயமற்றதும், பொறுப்பற்றதுமான செயல் என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, புதன்கிழமை வெளியிடப்படுவதாக இருந்த சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜாவடேகர் தில்லியில் வியாழக்கிழமை கூறுகையில், "சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிட காலதாமதமாகாது. தேர்வெழுதியுள்ள மாணவ, மாணவிகள் கவலைப்படத் தேவையில்லை' என்று உறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com