பேஸ்புக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை பின்னுக்குத் தள்ளினார் பிரதமர் மோடி 

உலக அளவில் பேஸ்புக்கில் அதிகமானோர் பின் தொடரும் பிரபலங்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பின்னுக்குத் தள்ளி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்தார்.
பேஸ்புக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை பின்னுக்குத் தள்ளினார் பிரதமர் மோடி 

புது தில்லி: உலக அளவில் பேஸ்புக்கில் அதிகமானோர் பின் தொடரும் பிரபலங்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பின்னுக்குத் தள்ளி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்தார்.

இது குறித்து பேஸ்புக்கின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான இயக்குநர் அங்கி தாஸ் கூறுகையில், இணையதளம் வாயிலாக பொதுமக்களை தொடர்பு கொள்ளும் முறையை பிரதமர் மோடி மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறார்.

2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற போது அவரை பேஸ்புக்கில் பின் தொடருவோர் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சம் பேர். ஆனால் அது தற்போது 4 கோடியே 19 லட்சத்து என்று உயர்ந்துள்ளது.

கிடைத்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், உலக அளவில் அதிகமானோர் பின் தொடரும் பேஸ்புக் பக்கமாக பிரதமர் நரேந்திர மோடியின் பக்கமும், அதற்கடுத்த இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பின் பக்கமும், 3வது இடத்தை பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகப் பக்கடும் இடம்பிடித்துள்ளன.

மோடி தனது தாயை சந்தித்தப் புகைப்படங்கள் 50 ஆயிரம் ஷேர்களையும், 1 லட்சத்து 50 ஆயிரம் லைக்குகளையும் பெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com