அனைவருக்கும் வேலைவாய்ப்பு சாத்தியமற்றது: அமித் ஷா

நாட்டில் உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது என்பது சாத்தியமற்றது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் வேலைவாய்ப்பு சாத்தியமற்றது: அமித் ஷா

நாட்டில் உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது என்பது சாத்தியமற்றது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, தில்லியில் செய்தியாளர்களை அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு முன்பு நாட்டை பல ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியின் அலட்சியப் போக்கே இதற்கு காரணமாகும். இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் ஆட்சியில் தொடக்கத்திலேயே கவனம் செலுத்தப்பட்டிருந்தால் வேலையில்லா நிலைமை இன்றைக்கு இருந்திருக்காது.
நாட்டில் வேலையில்லா நிலைமையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார்.
குறிப்பாக, சுய வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அரசு முயன்று வருகிறது. அந்த வகையில், இதுவரை சுமார் 8 கோடி பேர் சுய வேலைவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
வேலையில்லா நிலைமையை ஒரே நேரத்தில் சரிசெய்துவிட முடியாது. நாட்டில் உள்ள 125 கோடி பேருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சியில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருட்டில் தத்தளித்த கிராமங்களில் மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. 5 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் அமைத்து தரப்பட்டுள்ளன. 2 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் சூழலில், வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதுபோன்ற பல சாதனைகள் பாஜக ஆட்சியில் நடைபெற்றுள்ளன.
சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியா கண்டிராத ஓர் உறுதியான மற்றும் வெளிப்படையான அரசை மோடி கட்டமைத்துள்ளார்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசை எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com