இந்தியப் பொருளாதாரத்துக்கு புதியவழியைக் காட்டியவர் மோடி: பிரணாப்

பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தகவல் தொடர்பாளர் என்பதுடன், இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய வழியைக் காட்டியவர் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமிதம் தெரிவித்தார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் வானொலி நிகழ்ச்சி குறித்து எழுதப்பட்ட இரு புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் வானொலி நிகழ்ச்சி குறித்து எழுதப்பட்ட இரு புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தகவல் தொடர்பாளர் என்பதுடன், இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய வழியைக் காட்டியவர் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமிதம் தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி, அந்த ஆட்சியின் சாதனை குறித்து இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், வானொலியில் பிரதமர் மோடி இதுவரை நிகழ்த்திய "மனதின் குரல்' நிகழ்ச்சியின் உரை தொகுப்பு அடங்கிய புத்தகமும், "கோடிக்கணக்கானோருடன் பேரணி-பிரதமர் மோடி அரசின் ஆட்சி குறித்து ஆய்வு' என்ற தலைப்பிலான புத்தகமும் வெளியிடப்பட்டன.
இந்தப் புத்தகங்களை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட இரண்டு புத்தகங்களின் முதல் பிரதிகளை பிரணாப் முகர்ஜி பெற்றுக் கொண்டார். பின்னர், அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சமகாலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் மிகச் சிறந்த தகவல்தொடர்பாளர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நமது தேசத்தின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அவரது மகளும், நாட்டின் முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி ஆகியோரின் தகவல்தொடர்பு திறமையுடன் பிரதமர் மோடியின் தகவல்தொடர்பு திறமையை ஒப்பிடலாம்.
தகவல்தொடர்பு திறமையில்லை எனில் லட்சக்கணக்கான மக்களை வழிநடத்திச் செல்ல இயலாது. நமது தேசத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிதிநெருக்கடிகளை கடந்துவரும் வகையில் நமது தேசத்தின் பொருளாதாரத்துக்கு வலிமையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதால் வளர்ச்சிப் பணிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது சாத்தியம்.
இந்தியப் பொருளாதாரத்துக்கு பிரதமர் மோடி புதிய வழியை காட்டி உள்ளார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வரலாற்றில் நிலைத்து நிற்கும் வகையிலான பல்வேறு முடிவுகளும் அவரால் எடுக்கப்பட்டுள்ளன என்றார் பிரணாப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com