சுற்றுச்சூழல் சட்டங்களை பாஜக அரசு பலவீனப்படுத்தி வருகிறது: ஜெய்ராம் ரமேஷ்

""மத்திய அரசு சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை பலவீனப்படுத்தி வருகிறது'' என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல் சட்டங்களை பாஜக அரசு பலவீனப்படுத்தி வருகிறது: ஜெய்ராம் ரமேஷ்

""மத்திய அரசு சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை பலவீனப்படுத்தி வருகிறது'' என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், கடந்த 2009 முதல் 2011 வரை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஜெய்ராம் ரமேஷ்.
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்தியில் பாஜக ஆட்சியின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய மத்திய அரசு சுற்றுச்சூழல் குறித்து அதிகம் பேசுகிறது.
எனினும், சுற்றுச்சூழலைக் காக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
குறிப்பாக, தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
சுற்றுச்சூழல் தொடர்பான ஏராளமான திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக ஜாவடேகர் கூறியுள்ளார். உண்மையில், சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே அவரது பணியல்ல; சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தான் அவரது முக்கியப் பணி என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கவனித்து வந்த மறைந்த அனில் தவே, நான் அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் எனக்கு ஆதரவு தெரிவித்தார்.
இப்பிரச்னைகளில், பிரகாஷ் ஜாவடேகர் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை? என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com