திருமணப் பதிவு: மகளிர் ஆணையம் புதிய பரிந்துரை

திருமணங்களைப் பதிவு செய்வதற்கு கணவன் மற்றும் மனைவியின் கடவுச் சீட்டு விவரங்களை சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் தேசிய மகளிர் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

திருமணங்களைப் பதிவு செய்வதற்கு கணவன் மற்றும் மனைவியின் கடவுச் சீட்டு விவரங்களை சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் தேசிய மகளிர் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதன் மூலம் வெளிநாடு வாழ் இந்திய ஆண்கள் சிலர் தங்களது மனைவியைக் கைவிட்டு மற்றொரு திருமணம் செய்வது தடுக்கப்படும் என்று மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள் தங்களது வாழ்க்கைத் துணையை முறைப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்துக்கு தீர்வு காண தக்க பரிந்துரைகளை அளிக்குமாறு மத்திய பெண்கள் நலத் துறை அமைச்சகம் தேசிய மகளிர் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது. அதன்பேரில், சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருமணத்தைப் பதிவு செய்யும்போது தம்பதிகளின் கடவுச் சீட்டு விவரங்கள், அவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது தொடர்பான தகவல்கள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் இத்தகைய திருமண மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com