ஆதார் அட்டை கொண்டு வாருங்கள்: ஐஏஎஸ் மாணவர்களுக்கு யுபிஎஸ்சி அறிவுறுத்தல்

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதப்போகும் மாணவர்கள் தங்களது தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் புகைப்படம் தெளிவில்லாமல் இருந்தால், ஆதார் போன்ற அடையாள அட்டையை உடன்
ஆதார் அட்டை கொண்டு வாருங்கள்: ஐஏஎஸ் மாணவர்களுக்கு யுபிஎஸ்சி அறிவுறுத்தல்

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதப்போகும் மாணவர்கள் தங்களது தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் புகைப்படம் தெளிவில்லாமல் இருந்தால், ஆதார் போன்ற அடையாள அட்டையை உடன் கொண்டுவர வேண்டும் என்று குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்குத் தகுதியான நபர்களை குடிமைப் பணிகள் தேர்வாணையம், முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றை நடத்தி தேர்ந்தெடுக்கிறது. இந்நிலையில், அந்தப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வு, வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக, அறிவிப்பு ஒன்றை தேர்வாணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில், தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் மாணவரின் புகைப்படம் தெளிவில்லாமல் இருந்தால், அவர் தனது ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் கொண்டுவர வேண்டும் என்றும் யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. இதுதவிர, தேர்வறைக்குள் செல்லிடப்பேசி, கையடக்க கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படாது என்றும் குடிமைப் பணிகள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com