சலுகை மதிப்பெண் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: ஜாவடேகர்

சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியப் பாடத் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை
சலுகை மதிப்பெண் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: ஜாவடேகர்

சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியப் பாடத் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வுகளில் வினாக்கள் கடினமாக இருந்தாலோ, வினாத் தாள்களுக்கிடையே வேறுபாடு இருந்தாலோ மாணவர்களுக்கு கூடுதலாக சலுகை மதிப்பெண்கள் வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
எனினும், இந்த முறையை முடிவுக்குக் கொண்டு வர, சிபிஎஸ்இ மற்றும் 32 கல்வி வாரியங்கள் கடந்த மாதம் முடிவு செய்தன.
எனினும், சலுகை மதிப்பெண் முறை தொடரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், ஏற்கெனவே எழுதப்பட்ட தேர்வுகளின் முடிவுகளை பாதிக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப சலுகை மதிப்பெண்களுடன் 12 வகுப்புத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
எனினும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே சலுகை மதிப்பெண்கள் இல்லாமல் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலக் கல்வி வாரியங்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டன. இதனால், சலுகை மதிப்பெண்கள் பெறாத அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தச் சூழலில், இதுகுறித்து மனித வளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com