சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வில் நொய்டா மாணவி முதலிடம்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வில், உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்ஷா கோபால் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வில் நொய்டா மாணவி முதலிடம்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வில், உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்ஷா கோபால் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் மாணவ-மாணவிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வரையிலும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
இதில், நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்ஷா கோபால் 99.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். சண்டீகரைச் சேர்ந்த மாணவி பூமி சாவந்த் 99.4 சதவீத மதிப்பெண்களுடன் 2-ஆவது இடத்தையும், மாணவி மன்னத் லூத்ரா, மாணவர் ஆதித்யா ஜெயின் ஆகிய 2 பேர் 99.2 சதவீத மதிப்பெண்களுடன் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் 83.05 சதவீதமாக இருந்தது. அது இந்த ஆண்டில் 82 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களை (78 சதவீதம்) விட மாணவிகளே (87.50 சதவீதம்) அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதத்தில், திருவனந்தபுரம் பிராந்தியம் (95.62 சதவீதம்) முதலிடத்திலும், சென்னை பிராந்தியம் (92.60 சதவீதம்) 2-ஆவது இடத்திலும் உள்ளன.
10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 95 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களையும், 63,247 பேர் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களையும் எடுத்துள்ளனர். வெளிநாடுகளில் இருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளும் 92.02 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளோருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com